Connect with us

அனைவரது மனதையும் கொள்ளை கொண்ட ராயன் படத்தின் ‘வாட்டர் பாக்கெட்’ வீடியோ பாடல் வெளியானது..!!

Cinema News

அனைவரது மனதையும் கொள்ளை கொண்ட ராயன் படத்தின் ‘வாட்டர் பாக்கெட்’ வீடியோ பாடல் வெளியானது..!!

‘ராயன்’ படத்தில் இடம்பெற்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ‘வாட்டர் பாக்கெட்’ வீடியோ பாடலை படக்குழு யூடியூபில் வெளியிட்டுள்ளது.

நடிகர் தனுஷ் இயக்கி நடித்த அவரது 50 ஆவது படமான ராயன் கடந்த மாதம் 26 ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி தாறுமாறான வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமா கண்டெடுத்த முத்தான நடிகர்களில் தற்போது ஒர்தான நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். திரையுலகில் நடிகராக , பாடகராக , பாடலாசிரியராக கலக்கி வந்த இவரது 50 ஆவது படம் தான் ராயன் .

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பார்த்து பார்த்து செதுக்கப்பட்ட இப்படத்தில் தனுஷ் உடன் சேர்ந்து சந்தீப் கிஷன் , காளிதாஸ் , பிரகாஸ்ராஜ் , எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன் , அபர்ணா பாலமுரளி , சரவணன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

வெளியான நாள் முதல் நல்ல விமர்சனங்களுடன் வசூலிலும் தூள் கிளப்பி வரும் இப்படம் 100 கோடையை கடந்து வெற்றி நடை போட்டு வரும் நிலையில் தற்போது இப்படத்தில் உள்ள பாடல்களை படக்குழு யூடியூபில் வெளியீட்டுக்கு வருகிறது.

அந்த அந்தவகையில் தற்போது இப்படத்தில் இடம்பெற்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ‘வாட்டர் பாக்கெட்’ வீடியோ பாடலை படக்குழு யூடியூபில் வெளியிட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  100 கிளப்பில் இருந்தது Natural Star நானியின் சரிபோதா சனிவாரம்..!!

More in Cinema News

To Top