Connect with us

ப்ரீ புக்கிங்கில் சம்பவம் செய்யும் ராயன் – இதுவரை எவ்ளோ வசூல் தெரியுமா..?

Cinema News

ப்ரீ புக்கிங்கில் சம்பவம் செய்யும் ராயன் – இதுவரை எவ்ளோ வசூல் தெரியுமா..?

தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘ராயன்’ படம் வரும் 26 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படம் ப்ரீ புக்கிங்கில் வசூல் வேட்டை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் , இயக்குநர் , பாடகர் , பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்டு இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் .

எண்ணற்ற ரசிகர்களின் மனதை வென்றுள்ள தனுஷ் 50 ஆவது படத்தை தானே இயக்க வேண்டும் என முடிவு செய்து தரமான கதையையும் உருவாக்கி பார்த்து பார்த்து இயக்கி உள்ளார் . ராயன் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறது .

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் தனுஷ் உடன் சேர்ந்து காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் , செல்வராகவன் , எஸ்.ஜே.சூர்யா,அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படம் வரும் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படம் ப்ரீ புக்கிங்கில் பட்டையை கிளப்பி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராயன் படம் உலகளவில் 1.5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ப்ரீ புக்கிங்கிலேயே இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருவதால் ராயன் படம் வெளியான முதல் நாளில் நிச்சயம் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பெண் டிஎஸ்பி மீது நடத்தப்பட்ட தாக்குதல் - கடுமையான தண்டணை வழங்க இபிஎஸ் வலியுறுத்தல்..!!

More in Cinema News

To Top