Connect with us

மக்களவையில் இந்துக்கள் குறித்து பேசிய ராகுல் காந்தி – கொதித்தெழுந்த அண்ணாமலை..!!

Featured

மக்களவையில் இந்துக்கள் குறித்து பேசிய ராகுல் காந்தி – கொதித்தெழுந்த அண்ணாமலை..!!

மக்களவையில் இந்துக்களை வன்முறையாளர்கள் என்று கூறிய ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

எப்போதும்போல, தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி தனது உண்மையான நிலை என்னவென்பதை அம்பலப்படுத்தி வருகிறது. கடந்த வாரம் செங்கோல் என்றால், இன்று சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் வழிகளை இண்டியா கூட்டணி கையாண்டுள்ளது.

இன்று மக்களவையில் இந்துக்களை வன்முறையாளர்கள் என்று கூறியதற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். இதுபோன்ற இழிவான கருத்துக்களால் இந்நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தொடர்ந்து அவமதிக்கப்பட்டுள்ளனர். எவ்வ்ளவு பெரிய தோல்வியும் இண்டியா கூட்டணியின் ஈகோவை அடக்கிவிடாதுபோல என அண்ணாமலை வெளியிட்டுள்ள கண்டன செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலம் காலமாக இந்த பாஜக கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் நடைபெற்று வரும் இந்த வாய் போர் எப்போது தான் முடிவுக்கு வர போகிறது என்று தெரியவில்லை. மக்களவையில் ஒருவர் மீது ஒருவர் குறைசொல்லிக்குக்கொள்ளும் இந்த செயல் ஓட்டு போட்டு நல்லது நடக்குமா என்று எதிர்பார்த்து காத்திருக்கும் மக்களுக்கு ஏமாற்றத்தையும் கவலையையும் தான் தருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண வீடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

More in Featured

To Top