Connect with us

பேட்டிங்கில் மிரட்டிய ராகுல் – லக்னோவிடம் வீழ்ந்தது சென்னை அணி..!!!

Featured

பேட்டிங்கில் மிரட்டிய ராகுல் – லக்னோவிடம் வீழ்ந்தது சென்னை அணி..!!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் அபாரமாக ஆடிய லக்னோ அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் லக்னோவில் உள்ள உலக புகழ் பெற்ற கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் LSG – CSK அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ சூப்பர் கெய்ன்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பந்துவீச முடிவு செய்தார் . இதையடுத்து லக்னோ அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் சென்னை அணியின் முதலில் பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க வீரர்களாக அணியின் தொடக்க வீரர்களாக ரச்சின் மற்றும் ரஹானே களமிறங்கினர் . இதில் மாற்றத்தை கொண்டு வருவார் என்று முதலில் களமிறங்கப்பட்ட ரச்சின் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார் .

இதையடுத்து வந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும் 4வது ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இந்த பக்கம் பொறுப்புடன் ஆடிய ரஹானே 36 ரன்களில் அவுட்டாக . அடுத்து வந்த ஷிவம் துபே 3 ரன்களிலும், சமீர் ரிஸ்வி 1 ரன்கள் என அவுட்டாக சென்னை அணி மிடில் ஓவரில் தங்கமாக தடுமாறியது.

அணியை சரிவில் இருந்து மீட்க மொயின் அலி ஆடி வந்த நிலையில் அவரும் 30 ரன்களில் விக்கெட்டானார். மறுபுறம் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்த ஜடேஜாவுடன் 7ஆவது விக்கெட்டுக்கு கைகோத்தார் தோனி.

அவர் விளாசிய 2 சிக்சர்ஸால் அரங்கமே அதிர்ந்துபோக ஆட்டம் இறுதியில் சூடு பிடித்தது . இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த சிஎஸ்கே 176 ரன்களைச் சேர்த்தது.

இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் டிகாக் களமிறங்கினர்.

இந்த ஜோடி ஆரம்பம் முதல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த 10 ஓவர்களுக்குள் சென்னை அணியின் தோல்வி திட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

பொறுப்புடன் ஆடிய டிகாக் 54 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க . மறுமுனையில் சிறப்பாக ஆடிய ராகுல் 83 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.

கடைசி 2 ஓவர்களில் லக்னோவின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் நிகோலஸ் பூரான் அடித்தாட 6 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ அணி அபார வெற்றி பெற்றது.

See also  விபத்தில் உயிரிழந்த த.வெ.க.வினர் - வேதனை தெரிவித்த விஜய்..!!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top