Connect with us

அலப்பறை ஸ்டார்டிங் பிரண்ட்ஸ் – லோகேஷ் பாணியில் வெளியானது தலைவரின் கூலி படத்தின் தரமான அப்டேட்..!!

Cinema News

அலப்பறை ஸ்டார்டிங் பிரண்ட்ஸ் – லோகேஷ் பாணியில் வெளியானது தலைவரின் கூலி படத்தின் தரமான அப்டேட்..!!

5 ஸ்டார் இயக்குநர் லோகேஷ் மற்றும் ரஜினிகாந்த் காம்போவில் உருவாக இருக்கும் கூலி படத்தின் சிறப்பான தரமான அப்டேட்டை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் நட்சத்திர இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171 படம் உருவாக உள்ள படம் கூலி .

சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் மாபெரும் பொருட்ச்செலவில் தயாராகும் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் தான் இசையமைக்க உள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் தாறுமாறான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது என அனைவரும் காத்திருந்த நிலையில் தற்போது இப்படதின் தயாரிப்பு நிறுவனம் சுட சுட அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளது .

அதன்படி லோகேஷ் கனகராஜின் வெறித்தனமான இயக்கத்தில் ரஜினிகாந்தின் ஸ்டைலான நடிப்பில் உருவாகும் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியதாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இருப்பினும் இப்படத்தின் ஷூட்டிங் எங்கு நடைபெறுகிறது என்பது குறித்த தகவல் ரசியமாக வைக்கப்பட்டுள்ளதாகவும் இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் இரவு நேரத்திலேயே எடுக்கப்பட உள்ளதாகவும் ஒரு பக்கம் கதைக்கப்படுகிறது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கோட் படத்தில் அப்பாவை பார்த்து நெகிழ்ந்த கேப்டனின் மகன்கள்..!!

More in Cinema News

To Top