Connect with us

“ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ‘டங்கி’.. ட்ராப் 2 வீடியோ எப்போது?!”

Cinema News

“ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ‘டங்கி’.. ட்ராப் 2 வீடியோ எப்போது?!”

இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி, திரை ரசிகர்கள் கொண்டாட அவரது பெயர் மட்டுமே போதும்!! மக்களின் இதயங்களைத் தொடும் அழகான சினிமாவை தொடர்ந்து வழங்கியவர், திரையுலக மாஸ்டர் கதாசிரியர், இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பார்வையாளர்களின் மனதில் நீங்காத அளவில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வழங்கி, ப்ளாக்பஸ்டர் வெற்றி சாதனையும் படைத்துள்ளார்.

‘சஞ்சு,’ ‘பிகே,’ ‘3 இடியட்ஸ்,’ போன்ற கிளாசிக் படங்கள் மற்றும் அனைவரும் கொண்டாடிய ‘முன்னா பாய்’ என, ஹிரானி அனைத்து வயதினரும் எப்போதும் கொண்டாடும் சினிமா ரத்தினங்களை தொடர்ந்து வழங்கி வந்துள்ளார். இப்போது, ஷாருக்கானுடனான அவரது முதல் முறையாக இணைந்திருக்கும் ‘டங்கி’ மூலம், மீண்டும் திரையில் மாயாஜாலத்தை நிகழ்த்தவுள்ளார். ரசிகர்கள் நகைச்சுவை கலந்த மனம் மயக்கும் ஒரு இனிதான பயணத்திற்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ளலாம்.

உணர்ச்சிபூர்வமான அம்சங்களுடன் நகைச்சுவை, கலந்து சமூகச் செய்தியை சொல்லும் வகையில் கதைகளை வடிவமைக்கும் ஹிரானியின் தனித்துவமான திறன் தான், அவரது திரைப்படங்களை பொழுதுபோக்கிற்கும் மேலாக ஒரு உன்னத படைப்பாக உருவாக்குகிறது. அவரது படங்கள் கலாச்சார அடையாளமாகவும் அவற்றை நோக்கிய, உரையாடல்களைத் தூண்டுவதாகவும், சமூகத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

அவரது படங்கள் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதில் ஆச்சரியமில்லை. ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழுவைக் கொண்ட ‘டங்கி’ திரைப்படத்தில் நகைச்சுவை, இதயம் வருடும் அழகான அனுபவம் என மீண்டும் திரையில் ஒரு காவியத்தை காட்டவுள்ளது. மேலும் இது இந்த டிசம்பரில் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை மகிழ்விக்க வருகிறது டங்கி.

இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ள, “டங்கி” திரைப்படம், இந்த டிசம்பர் 2023 இல் வெளியிடப்பட உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நல்ல நடிப்புடன் கூடிய ஜாலியான படம் - ‘லப்பர் பந்து’ படக்குழுவுக்கு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பாராட்டு..!!

More in Cinema News

To Top