Connect with us

WPL : நடப்பு சாம்பியன் மும்பையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது RCB அணி..!!

Featured

WPL : நடப்பு சாம்பியன் மும்பையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது RCB அணி..!!

விறுவிறுப்புக்கு பரபரப்புக்கும் பஞ்சமில்லமல் நடைபெற்று வரும் WPL தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் நடப்பு சாம்பியன் மும்பையை வீழ்த்தி இறுதி போட்டிக்கு கெத்தாக முன்னேறி உள்ளது RCB அணி.

ஐ.பி.எல் தொடரில் எந்த அளவுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதோ அதே அளவுக்கு பெண்களுக்கான WPL தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதில் நேற்று இரவு டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் மும்பை அணிக்கு எதிராக டாஸ் வென்ற RCB அணி முதலில் பேட்டிங் செய்தது. பேட்டிங்கில் சுமாராக விளையாடிய அந்த அணி 2-0 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணி பேட்டிங்கில் ஆரம்பம் முதல் சொதப்பியது. சிறப்பாடிய விளையாடுவார்கள் என்று மும்பை அணி சார்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க மும்பை அணியோ பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது.

என்றும் இல்லாமல் நேற்று சிறப்பாக பந்துவீசிய RCB அணி 5 ரன்களில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு கெத்தாக முன்னேறி உள்ளது.

இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய டெல்லி அணி ஏற்கனவே கெத்தாக இறுதி போட்டிக்கு சென்றுள்ள நிலையில் அந்த அணியை எதிர்த்து எந்த அணி இறுதி போட்டியில் விளையாட போகிறது என்பது நேற்று வரை தெரியாமல் இருந்த நிலையில் RCB அணியின் வெற்றி அனைவர்க்கும் மிக பெரிய சர்ப்ரைஸாக அமைந்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  எமோஷனல் காட்சியில் அபாரம் காட்டிய கவின் - Bloody Beggar படக்குழுவுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் புகழாரம்..!!

More in Featured

To Top