Connect with us

“முத்து v ஆளவந்தான் Box Office Report..! ரீ ரிலீஸ் வசூலில் யார் Top?!”

Cinema News

“முத்து v ஆளவந்தான் Box Office Report..! ரீ ரிலீஸ் வசூலில் யார் Top?!”

கடந்த 1995-ம் ஆண்டு கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி, மீனா, சரத்பாபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற படம் ‘முத்து’. கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படம் கடந்த 8-ம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.

இந்த மறுவெளியீட்டை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ரசிகர்களுடன் இணைந்து பார்த்தார். பின்னர் பேசிய அவர் விரைவில், ‘படையப்பா’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என தெரிவித்திருந்தார்.

அதேபோல கமல்ஹாசன் நடிப்பில் தாணு தயாரிப்பில் கடந்த 2001-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான ‘ஆளவந்தான்’ படமும் 8-ம் தேதி ரீ – ரிலீஸ் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் வெளியிடப்பட்ட இப்படத்தின் 50 நிமிடங்கள் எடிட் செய்யப்பட்டு வெளியானது.

இந்நிலையில், தமிழகத்தில் இரண்டு படங்களுக்கும் வரவேற்பு இருந்த போதிலும், ‘ஆளவந்தான்’ படத்துக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதன் எதிரொலியாக முதல் மூன்று நாள் வசூலில் கமலின் ‘ஆளவந்தான்’ தமிழகத்தில் ரூ.15 லட்சம் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினியின் ‘முத்து’ திரைப்படம் அதில் பாதி, அதாவது ரூ.7 லட்சம் அளவில் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ‘ஆளவந்தான்’ உலக அளவில் இன்னும் கூடுதலாக வசூலை குவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரையரங்கை மிரட்ட வரும் கங்குவா - புதிய ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு..!!

More in Cinema News

To Top