Connect with us

ரியோ – மாளவிகா மனோஜ் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!!

Cinema News

ரியோ – மாளவிகா மனோஜ் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!!

ஜோ’ திரைப்பட ஜோடி ரியோ – மாளவிகா மனோஜ் மீண்டும் இணைந்த புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .

தமிழ் சினிமாவில் இருக்கும் பல திறமை வாய்ந்த நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரியோ ராஜ் . தொலைக்காட்சியில் தொடங்கி இன்று திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக கலக்கி வரும் இவர் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் .

இதையடுத்து பல வெற்றி படங்களை கொடுத்த இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் தான் ஜோ . ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகிவரும் மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்த இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கினார்.

அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திய ரியோ ராஜுடன் இந்த படத்தில் மாளவிகா மனோஜ் உள்ளிட்ட பல இளம் நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் ரியோ மற்றும் மாளவிகாவின் கெமிஸ்ட்ரி செமயாக ஒர்கவுட் ஆக மீண்டும் இவர்கள் ஜோடி சேரவேண்டும் என ரசிகர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதன்படி ரியோ மற்றும் மாளவிகா ஜோடி சேரும் புதிய படம் உருவாகி வந்த நிலையில் தற்போது இப்படத்தில் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

புதுமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு சித்துகுமார் இசையமைத்துள்ளார்.

படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்சன் பணிகளை தொடங்கியுள்ளதாகவும் . விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சென்னையை துவைத்தெடுக்கும் கனமழை - சூப்பர்ஸ்டார் வீட்டில் ஏற்பட்ட பாதிப்பு..!!

More in Cinema News

To Top