Connect with us

கர்ப்பமாக இருக்கும் ரோபோ ஷங்கர் மகள் – பலகோடி மக்கள் கேட்க்கும் வகையில் அறிவித்த இளம் தம்பதி..!!

Cinema News

கர்ப்பமாக இருக்கும் ரோபோ ஷங்கர் மகள் – பலகோடி மக்கள் கேட்க்கும் வகையில் அறிவித்த இளம் தம்பதி..!!

நடிகர் ரோபோ ஷங்கரின் மகளும் நடிகையுமான இந்திரஜா தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை பல கோடி மக்கள் கேட்கும் வகையில் அறிவித்துள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரோபோ சங்கர் . டி வி நிகழ்ச்சி மூலம் இவருக்கு ஏராளமான சினிமா வாய்ப்புகள் வர தற்போது தமிழ் சினிமாவின் சிறந்த குணசித்ர நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் .

இதுமட்டுமின்றி இவரது மூத்த மகள் இந்திரஜாவும் சினிமாவில் நடித்து வருகிறார். அதிலும் குறிப்பாக தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் பெரிதளவில் பேசப்பட்டு இவருக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்று கொடுத்தது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது சொந்த மாமாவை இந்திரஜா திருமணம் செய்துகொண்டார் . இதையடுத்து இந்த இளம் ஜோடி மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக களமிறங்கி கலக்கி வருகின்றனர்.

இப்படி எல்லா சிறப்பாக சென்றுகொண்டிருக்க இந்திரஜாவின் கணவர் கார்த்திக், நாங்கள் இருவரும் தாய், தந்தை ஆகப்போகிறோம் என கூறி, தனது மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என்கிற மகிழ்ச்சி தரும் செய்தியை வெளியிட்டுள்ளார்.

அதுவும் இந்த செய்தியை மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் பலகோடி மக்கள் கேட்கும் வகையில் அறிவித்துள்ளார் . இதன்காரணமாக தற்போது இந்த இளம் ஜோடி அனைவரும் வாழ்த்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வேட்டையன் படத்தில் ராணாவின் அறிமுக வீடியோவை வெளியிட்டது படக்குழு..!!

More in Cinema News

To Top