Connect with us

எதிர்பார்ப்பை எகிறவைத்த ராக் ஸ்டார் அனிருத்..!! வேட்டையன் படத்தின் புது அப்டேட் இதோ..

Cinema News

எதிர்பார்ப்பை எகிறவைத்த ராக் ஸ்டார் அனிருத்..!! வேட்டையன் படத்தின் புது அப்டேட் இதோ..

ரஜினிகாந்த் உள்பட ஏராளமான திரை நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி உள்ள வேட்டையன் படத்தின் சிறப்பான தரமான அப்டேட்டை அப்படத்தின் இசையமைப்பாளரான அனிருத் கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமா ரசிகர்களால் பெரியளவில் கொண்டாடப்பட்ட ஜெய் பீம் என்ற படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படமே வேட்டையன் .

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் இப்படத்தில் அவருடன் இணைந்து ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் , அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்ட பொருட் செலவில் தயாரித்து வருகிறது .

இந்நிலையில் இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வரும் நிலையில் தற்போது வேட்டையன் படத்தின் அடுத்த சிறப்பான தரமான அப்டேட்டை அப்படத்தின் இசையமைப்பாளரான அனிருத் கொடுத்துள்ளார்.

இதுவரை வேட்டையன் படத்தில் இருந்து எந்த பாடல்களும் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது இப்படத்தின் மனசிலாயோ என்ற பாடல் விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

ஜெயிலர் படத்தில் வந்த தலைவர் நிரந்தரம் பாடலை எழுதிய சூப்பர் சுப்பு தான் மனசிலாயோ பாடலையும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விமல் நடிப்பில் உருவாகி உள்ள சார் படத்தின் `படிச்சிகிறோம்' பாடல் வெளியானது..!!

More in Cinema News

To Top