Connect with us

மைதானத்தில் சம்பவம் செய்த சஞ்சு சாம்சன் – வங்கதேசத்துக்கு 298 ரன்கள் இமாலய இலக்கு..!!

Featured

மைதானத்தில் சம்பவம் செய்த சஞ்சு சாம்சன் – வங்கதேசத்துக்கு 298 ரன்கள் இமாலய இலக்கு..!!

வங்கதேசத்திற்கு எதிரான 3வது டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வங்கதேச அணிக்கு 298 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்க தேச அணி டெஸ்ட் மற்றும் T20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இரு ஆணிகளுக்கிடையே முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி தொடரை கைப்பற்றி கெத்துக்காட்டியது.

இதையடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடி வரும் நிலையில் இந்த தொடரையும் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இன்று கடைசி மற்றும் 3 ஆவது T20 போட்டியில் இரு அணிகளும் விளையாடுகிறது . இந்த போட்டியில் வாங்க தேச அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

அணியின் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் – அபிஷேக் சர்மா களமிறங்கினர். சிறப்பாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அபிஷேக் சர்மா 4 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.

மறுபுறம் வெளுத்துவங்கிய சஞ்சு சாம்சன் 22 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். மறுபக்கம் அதிரடி காட்டிய சூர்ய குமார் யாதவ் 23 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதையடுத்து சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் 40 பந்துகளில் சதமடிக்க அணியின் ஸ்கோர் அங்கேயே சென்றது.

இதையடுத்து 75 ரன்களில் சூர்ய குமார் வெளியேற . அடுத்து வந்த ரியான் பராக் மற்றும் ஹர்டிக் பாண்டியா பந்துகளை நாலாபுறமும் பறக்க விட்டனர் .

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய 297 ரன்களை குவித்தது. இதையடுத்து 298 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது வங்கதேச அணி விளையாடி வருகிறது.

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 2வது அதிகபட்ச ஸ்கோர் எடுத்து இந்திய அணி அபாரம் காட்டியுள்ள நிலையில் இந்திய அணிக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வசூல் வேட்டையாடும் தலைவரின் வேட்டையன் திரைப்படம் - வசூல் விவரத்தை வெளியிட்ட படக்குழு..!!

More in Featured

To Top