Connect with us

பொறுப்புடன் ஆடிய சஞ்சு சாம்சன் – ஜிம்பாப்வே அணிக்கு 168 ரன்கள் இலக்கு..!!

Featured

பொறுப்புடன் ஆடிய சஞ்சு சாம்சன் – ஜிம்பாப்வே அணிக்கு 168 ரன்கள் இலக்கு..!!

ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வரும் டி20 தொடரில் இன்று நடைபெறும் கடைசி மற்றும் 5வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஜிம்பாப்வே அணிக்கு 168 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

கில் தலைமையிலான இந்திய அணி ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 4 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 3 – 1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வரும் இந்திய அணி தொடரையும் கைப்படறி உள்ளது .

இந்நிலையில் ஜிம்பாப்வேவில் உள்ள புகழ்பெற்ற Harare Sports Club மைதானத்தில் இன்று நடைபெறும் 5வது டி20 போட்டியில் இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் விளையாடுகிறது.

இந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பவுலிங் போட முடிவு செய்தது . இதையடுத்து ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் மற்றும் கில் ஆளுக்கு 10 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது வெளியேறினர் .

இதையடுத்து வந்த சஞ்சு சாம்சன் அபிஷேக் வர்மாவுடன் சேர்ந்து பொறுப்புடன் விளையாடினார். இதில் அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் 14 ரன்களில் அவுட்டாக சிறப்பாக விளையாடிய சஞ்சு 58 ரன்களில் விக்கெட்டானர்.

இதையடுத்து வந்த வீரர்கள் ஓரளவு தாக்குப்பிடிக்க 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 167 ரன்கள் எடுத்துள்ளது . இதையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது ஜிம்பாப்வே பேட்டிங் செய்து வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் தொடரை தவறவிட்டுள்ள ஜிம்பாப்வே அணி ஆறுதல் வெற்றி பெறுமா இல்லை வெற்றியுடன் இந்திய அணி நாடு திரும்புமா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழ்நாட்டின் அவலநிலையை மறைக்கவே இந்த கார் ரேஸ் பந்தயம் - ஈபிஎஸ் விளாசல்..!!

More in Featured

To Top