Connect with us

‘சர்தார் 2’ பட சண்டை பயிற்சியாளர் மறைவு எதிரொலி – சென்னையில் நாளை மறுநாள் படப்பிடிப்பு ரத்து..!!

Cinema News

‘சர்தார் 2’ பட சண்டை பயிற்சியாளர் மறைவு எதிரொலி – சென்னையில் நாளை மறுநாள் படப்பிடிப்பு ரத்து..!!

‘சர்தார் 2′ படப்பிடிப்பு விபத்தில் சண்டை பயிற்சியாளர் ஏழுமலை உயிரிழந்ததை அடுத்து, படப்பிடிப்புகளில் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக வரும் 25ம் தேதி சிறப்பு கூட்டத்தை கூட்ட உள்ளதாக பெப்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

கடந்த 17.7.2024 அன்று சர்தார் -2 படப்பிடிப்பு நடந்த விபத்தில் நமது தென்னிந்திய திரைப்பட & டிவி சண்டை இயக்குனர்கள் சண்டை கலைஞர்கள் சங்கத்தின் உறுப்பினர் திரு. ஏழுமலை அவர்கள் அகால மரணம் அடைந்த துயரமான செய்தியை நாம் அனைவரும் அறிந்திருப்போம்.

படப்பிடிப்பில் பணிபுரியும் போது உறுப்பினர்களுக்கு தகுந்த பாதுகாப்பு கருவிகள், படப்பிடிப்பு நிலையங்களில் இருக்க வேண்டும். மற்றும் Ambulanceவுடன் கூடிய மருத்துவ வசதிகள் அளிக்கப்பட வேண்டும் என்றும் பல முறை தொடர்ச்சியாக தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், தயாரிப்பு நிறுவனங்களுக்கும் வேண்டுகோள் விடுத்த வண்ணம் உள்ளோம்.

சில நிறுவனங்கள் தவிர பெரும்பாலான தயாரிப்பு நிறுவனங்கள் இந்த பாதுகாப்பு விதிகளை சிறிதளவும் பின்பற்றுவது இல்லை மேலும் படப்பிடிப்பில் பணிபுரியும் திரைப்பட கலைஞர்கள் / தொழிலாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணிபுரிவதால் பல உறுப்பினர்கள் படப்பிடிப்பு நடக்கும் இடங்களிலேயே மரணம் ஏற்படுகின்ற அபாயகரமான சூழ்நிலையில் உறுப்பினர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள்.

எனவே உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு கருவிகள், வேண்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வருகின்ற 25.7.2024 தேதியன்று வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில், காலை 9.00 மணியளவில் திரைப்பட கலைஞர்கள் தொழிலாளர்களின் பாதுகாப்பு விழிப்புணர்வு சிறப்பு கூட்டம் ஒன்றை நடத்த உள்ளோம்.
மேலும் அன்றைய தினம் அனைத்து சங்க உறுப்பினர்களும் கலந்து கொள்ள ஏதுவாக 25.7.2024 அன்று சென்னை நகரில் உள்ளூர் படப்பிடிப்புகள் (சின்னத்திரை, பெரியத்திரை மற்றும் அனைத்து படப்பிடிப்புகள்) நடைபெறாது.

மேலும் வெளியூரில் நடக்கின்ற அனைத்து படப்பிடிப்புகளில் காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை அனைத்து உறுப்பினர்களையும் படப்பிடிப்பு தளத்திற்கு வரவழைத்து அனைத்து பாதுகாப்பு விதிகளையும் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என 19.7.2024 அன்று நடைபெற்ற சம்மேளன செயற்குழுவில் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

விழிப்புணர்வு குறித்து அனைத்து பாதுகாப்பு விதிகளையும் வெளியூரில் படப்பிடிப்பு நடைபெறும் அனைத்து தயாரிப்பு நிறுவனங்களுக்கும், தயாரிப்பு நிர்வாகிகள் மூலம் தெரிவிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த விழிப்புணர்வு கூட்டத்திற்கு தாங்கள், தங்கள் செய்தியாளர்கள் கேமிராவுடன் வருகை தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கடும் கோபத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட அதிர்ச்சி பதிவு - என்ன மேட்டர் தெரியுமா..?

More in Cinema News

To Top