Connect with us

சர்வதேச அங்கீகாரம் பெறும் சீனு ராமசாமியின் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’..!!

Cinema News

சர்வதேச அங்கீகாரம் பெறும் சீனு ராமசாமியின் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’..!!

சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிட தேர்வாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் கிராமத்து கலாச்சாரம் மாறாமல் படங்களை இயக்கம் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் இயக்குநர் சீனு ராமசாமி. தென்மேற்கு பருவக்காற்று , தர்மதுரை , உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாக்கி உள்ள திரைப்படமே ‘கோழிப்பண்ணை செல்லதுரை’

ஏகன் , பிரிகிடா , யோகிபாபு உள்ளிட்ட பல திரைநட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம் நேற்று உலகெங்கும் உள்ள திரையரங்குங்களில் வெளியாகி தற்போது வெற்றிநடைபோட்டு வருகிறது.

இந்நிலையில் இப்படம் ஏற்கனவே ஆக்லாண்டு திரைப்பட விழாவில் திரையிட தேர்வான நிலையில் தற்போது மேலும் சில சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிட தேர்வாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி ஆக்லாண்டு திரைப்பட விழாவை தொடர்ந்து சீனு ராமசாமியின் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படம் மேலும் 2 திரைப்பட விழாக்களில் திரையிட தேர்வாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆர்ப்பா இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் போட்டிப் பிரிவிலும், நியூபோர்ட் பீச் ஃபிலிம் ஃபெஸ்ட்டிலும் இப்படம் திரையிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கமலா ஹாரிஸ்க்கு ஆதரவாக ஒலிக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் குரல்..!!

More in Cinema News

To Top