Connect with us

ஷாருக்கான் மகனுக்கும் ஜாக்கி சானுக்கும் இப்படி ஒரு ஒத்துமையா..? வெளியான சுவாரஸ்ய தகவல்..!!

Cinema News

ஷாருக்கான் மகனுக்கும் ஜாக்கி சானுக்கும் இப்படி ஒரு ஒத்துமையா..? வெளியான சுவாரஸ்ய தகவல்..!!

பாலிவுட் பாஷாவாக கலக்கி வரும் நடிகர் ஷாருக்கான் தனது மகனுக்கும் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சானுக்கும் மாபெரும் ஒற்றுமை இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஒரு பக்கம் சினிமா மறுபக்கம் பல தொழில்கள் என மிகவும் பிஸியாக வலம் வருபவர் நடிகர் ஷாருக்கான் . பாலிவுட் பாஷா என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் ஷாருக்கான் தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் .

58 வயதாகும் இவர் இன்றும் கட்டுடன் மேனியில் கம்பீரமாக தனது அன்றாட வேலைகளை செய்து வரும் நிலையில் தனது மகன் ஆர்யன் கான் குறித்து கலகலப்பாக பேசியுள்ளார்.

சுவிட்சர்லாந்தில் 77-வது லோகார்னோ திரைப்பட விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் நடிகர் ஷாருக்கானுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது.

இதையடுத்து அங்கு நடைபெற்ற ரசிகர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய ஷாருக்கான் கூறியதாவது :

தனது மகன் ஆர்யன் கான் பிறந்தபோது நடிகர் ஜாக்கி சான் போன்று தான் இருந்தார் . எனக்கு விருப்பமான நடிகர்களுள் எப்போதும் ஜாக்கி சான் இருப்பார். அவர் அற்புதமானவர். என்னை எப்போதும் ஊக்கப்படுத்துவார்.

எனது மகன் ஆர்யன் கான் பிறந்தபோது அவரது முகச்சாடையையே ஒத்திருந்தான். அவன் ஜாக்கி சான் போல் இருப்பதை நான் உணர்ந்தேன். ஆர்யனும் ஜாக்கி போல வளருவான் என அவனுக்கு டேக்வாண்டோ பயிற்சி அளித்தேன். அவன் ஜாக்கி சான் போலவே இருக்க வேண்டும் என நான் நினைத்தேன் என நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விமலின் ‘சார்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!!

More in Cinema News

To Top