Connect with us

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷாலினி – பதறியடித்து ஓடி வந்த அஜித்..!!

Cinema News

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷாலினி – பதறியடித்து ஓடி வந்த அஜித்..!!

நடிகர் அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஷாலினியை காண வந்த அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் அஜித்தின் நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வரும் படம் தான் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், பிரியா பவானி ஷங்கர், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

அஜர்பைஜான் நாட்டில் பல மாதங்களாக முழு வீச்சில் உருவாகி வந்த இப்படத்தின் படப்பிடிப்புக்கு குட்டி பிரேக் விடப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் அஜர்பைஜானில் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது.

அந்நாட்டில் படத்தின் சண்டை காட்சிகள் படமாக்கப்படும் வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் நடிகர் அஜித்தின் மனைவியும், நடிகையுமான ஷாலினி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம். அவருடன் இந்த நேரத்தில் இருக்க வேண்டும் என எண்ணிய அஜித் படக்குழுவிடம் லீவு கேட்டுவிட்டு ஷாலினியை பார்க்க சென்னை வந்துள்ளார்.

இதையடுத்து மருத்துவமனையில் அஜித்துடன் எடுத்த புகைப்படத்தை ஷாலினியே தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து LOVE YOU FOREVER என தெரிவித்துள்ளார் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சதீஷ் நடிப்பில் உருவான ‘சட்டம் என் கையில்’ படத்தின் டீசர் வெளியானது..!!

More in Cinema News

To Top