Connect with us

நடிகை அதுல்யா வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம் – பணிப்பெண் உட்பட இருவர் கைது..!!

Cinema News

நடிகை அதுல்யா வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம் – பணிப்பெண் உட்பட இருவர் கைது..!!

பிரபல தமிழ் திரைப்பட நடிகை அதுல்யா ரவியின் வீட்டில் திருட்டு நடந்துள்ளதாகவும் அவரின் வீட்டில் வேலை செய்து வந்த பெண் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை அதுல்யா ரவி. தமிழ் உள்பட பல மொழி படங்களில் மிகவும் பிஸியாக நடித்து வரும் இவரது நடிப்பில் தற்போது சில படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளது .

கோவையை பூர்விகமாக கொண்ட நடிகை அதுல்யா ரவி, தனது குடும்பத்துடன் வடவள்ளி பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை அதுல்யா ரவி வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஸ்போர்ட் மற்றும் ரூ.2000 பணம் திருடு போயியுள்ளதாகக் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருந்தது .

இதுகுறித்து காவல் நிலையத்தில் நடிகை அதுல்யா புகார் அளித்திருந்த நிலையில் அதுல்யா வீட்டில் வேலை செய்து வந்த செல்வி மற்றும் அவரது தோழியை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்

போலீசார் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில் தங்கள் தான் பாஸ்போர்ட் மற்றும் பணத்தை திருடியதாக இருவரும் ஒப்புக்கொண்டனர்.

சமீப காலமாக திரை நட்சத்திரங்கள் வீட்டில் வேலை செய்பவர்கள் கைவரிசை காட்டிவருவது தொடர்கதையாகி வரும் நிலையில் திரை நட்சத்திரங்கள் மத்தியில் சற்று பீதியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் லிரிக் வீடியோ வெளியானது..!!

More in Cinema News

To Top