Connect with us

அயர்லாந்தில் சத்தமின்றி நடைபெறும் கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு..!!

Cinema News

அயர்லாந்தில் சத்தமின்றி நடைபெறும் கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு..!!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு தற்போது அயர்லாந்து நாட்டில் சத்தமின்றி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கமலஹாசனின் நடிப்பில் கடந்து சில நாட்களுக்கு முன் வெளியான இந்திய 2 திரைப்படம் எதிர்பார்த்ததை விட சற்று மந்தமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது நடிகர் கமல்ஹாசன் அடுத்தகட்ட படங்களில் உன்னிப்புடன் நடிக்க தயாராகி வருகிறார் .

மாஸ் பட்ஜெட் படங்களில் மட்டுமே அதீத கவனம் செலுத்தி வரும் கமல்ஹாசன் தற்போது ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகும் தக் லைஃப் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

உலக நாயகனின் 234வது படமாக உருவாகும் இப்படத்தில் கமலுடன் நாசர், அபிராமி, கெளதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், சிம்பு , ஐஸ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட பல முன்னணி நடித்து வருகின்றனர்.

நாளுக்கு நாள் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் தற்போது இப்படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது . அதன்படி இப்படத்தின் முக்கிய காட்சிகள் அயர்லாந்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தஞ்சையில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பு - டிடிவி தினகரன் கண்டனம்..!!

More in Cinema News

To Top