Connect with us

தலைவரின் கூலி படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் – சிறப்பு போஸ்டரை வெளியிட்டது படக்குழு..!!

Cinema News

தலைவரின் கூலி படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் – சிறப்பு போஸ்டரை வெளியிட்டது படக்குழு..!!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 171வது படமாக உருவாகி வரும் கூலி படத்தில் நடிகர் கமல்ஹாசனின் அன்பு மகளும் பிரபல தென்னிந்திய நடிகையுமான ஸ்ருதிஹாசன் இணைந்துள்ளதாக படக்குழு சிறப்பு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது .

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நட்சத்திர இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ் . இவரது இயக்கத்தில் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வரும் படமே கூலி.

இந்நிலையில் லோகேஷ் மற்றும் ரஜினிகாந்த் கம்போவில் உருவாகும் இந்த படம் எந்த கதையம்சம் கொண்டதாக இருக்கும் லோகேஷின் கடந்த படங்களை போல இந்த படத்திலும் ஏரளமான சண்டை காட்சிகள் இருக்குமா என்ற ஆர்வம் இப்போதிலிருந்தே ரசிகர்கள் மனதில் அழுத்தமாக எழுந்துள்ளது.

நாட்கள் செல்ல செல்ல கூலி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் தற்போது கூலி படத்தில் நடிக்க போகும் நடிகர்கள் குறித்த விவரங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது .

அதன்படி தற்போது கூலி படத்தில் நடிகர் கமல்ஹாசனின் அன்பு மகளும் பிரபல தென்னிந்திய நடிகையுமான ஸ்ருதிஹாசன் இணைந்துள்ளதாக படக்குழு சிறப்பு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது .

ஏற்கனவே இப்படத்தில் பிரபல தென்னிந்திய நடிகர் நாகர்ஜுனா மற்றும் சவுபின் ஷாயிரின் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்த நிலையில் தற்போது ஸ்ருதி ஹாசனும் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கோட் படத்தில் அப்பாவை பார்த்து நெகிழ்ந்த கேப்டனின் மகன்கள்..!!

More in Cinema News

To Top