Connect with us

மீண்டும் மன்மதனாகும் சிம்பு – வெளியானது STR49 படத்தின் அறிவிப்பு..!!

Cinema News

மீண்டும் மன்மதனாகும் சிம்பு – வெளியானது STR49 படத்தின் அறிவிப்பு..!!

நடிகர் சிம்புவின் 49 வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன் . குழந்தை பருவத்தில் இருந்து நடித்து வரும் இவரது நடிப்பில் இவருக்கு உலகம் முழுவதும் எண்ணற்ற ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

அடுத்தடுத்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸில் கலக்கி வரும் நடிகர் சிம்பு தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் . அந்தவகையில் தற்போது நடிகர் சிம்புவின் 49வது திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

‘ஓ மை கடவுளே’ என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தான் சிம்பு நடிக்க உள்ளார் . ஏஜிஎஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கும் இந்த படத்தின் போஸ்டர் தான் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ‘கங்குவா’ இசை வெளியீட்டு விழா குறித்து வெளியான தாறுமாறு அப்டேட்..!!

More in Cinema News

To Top