Connect with us

3வது குழந்தைக்கு மாபெரும் விழா நடத்தி பெயர் சூட்டிய சிவகார்த்திகேயன்..!! என்ன பெயர் தெரியுமா..?

Cinema News

3வது குழந்தைக்கு மாபெரும் விழா நடத்தி பெயர் சூட்டிய சிவகார்த்திகேயன்..!! என்ன பெயர் தெரியுமா..?

நடிகர் சிவகார்த்திகேயனின் மூன்றாவது குழந்தைக்கு மாபெரும் விழா நடத்தி பெயர் சூட்டியுள்ள வீடியோ வெளியாகி இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது .

தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். நடிகர் தயாரிப்பாளர் , பாடல் ஆசிரியர் என தமிழ் சினிமாவில் பல அவதாரங்களை எடுத்துள்ள இவருக்கு உலகம் முழுவதும் ஏரளாமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

ஒருபக்கம் நடிகராக கலக்கி வந்தாலும் மறுபக்கம் பொறுப்பான குடும்ப தலைவராகவும் எஸ்.கே இருந்து வருகிறார்.

மக்கள் கொண்டாடும் குடும்ப நாயகனாக வலன் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி ஆர்த்திக்கு ஏற்கனவே ஆராதனா மற்றும் குகன் என இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இவர்களுக்கு கடந்த ஜூன் 2 ஆம் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் தங்களது 3 வது குழந்தைக்கு பவன் சிவகார்த்திகேயன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக நடிகர் சிவகார்த்திகேயன் அழகிய வீடியோ ஒன்றை பகிர்ந்து மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் .

சிவகார்த்திகேயனின் இல்லத்தில் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் நடந்து முடிந்துள்ள இந்த பெயர் சூட்டும் விழாவின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையடுத்து சிவகார்த்திகேயன் மற்றும் அவரது குடும்பத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  'Bloody Beggar' படத்தின் 2வது Sneak Peek வீடியோ வெளியானது..!!

More in Cinema News

To Top