Connect with us

சர்தார் 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா – போஸ்டருடன் வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Cinema News

சர்தார் 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா – போஸ்டருடன் வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

கார்த்தியின் நடிப்பில் திரையரங்குகளில் சக்கைப்போடு போட்ட சர்தார் படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் வெற்றிகரமாக தொடங்கியுள்ள நிலையில் தற்போது இப்படத்தில் பிரபல குணசித்ர நடிகரான எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் தனது தனித்துவ நடிப்பால் தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகர் கார்த்தி . அண்ணனை போலவே பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது .

அந்தவகையில் கார்த்தியின் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார் . பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்தது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில நாட்களுக்கு முன் பூஜையுடன் தொடங்கியுள்ள நிலையில் இப்படத்தில் பிரபல ணசித்ர நடிகரான எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளதாக அசத்தலான போஸ்டர் மூலம் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சதீஷ் நடிப்பில் உருவான ‘சட்டம் என் கையில்’ படத்தின் டீசர் வெளியானது..!!

More in Cinema News

To Top