Connect with us

“அடி தூள்” தெலுங்கில் ரீமேக் ஆகும் சூரியின் ‘கருடன்’..!!

Cinema News

“அடி தூள்” தெலுங்கில் ரீமேக் ஆகும் சூரியின் ‘கருடன்’..!!

சூரியின் மிரளவைக்கும் நடிப்பில் வெளியாகி 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த கருடன் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கால் பதித்து இன்று தமிழ் சினிமாவே போற்றும் வசூல் நாயகனாக கலக்கி வருபவர் நடிகர் சூரி . வெற்றிமாறனின் விடுதலை படத்தில் கத்தியின் நாயகனாக நடிக்க தொடங்கிய இவர் ஹீரோவாக அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் . அந்தவகையில் சூரியின் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படமே கருடன்.

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தரமாக தயாரான இப்படம் கடந்த மே மாதம் 31 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.

ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிப்படமாக உருவெடுத்துள்ள இப்படம் மொத்தமாக 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்நிலையில் சூரியின் ‘கருடன்’ படத்தின் தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது .

‘கருடன்’ தெலுங்கு ரீமேக்கினை ‘நந்தி’ படத்தினை இயக்கிய விஜய் கனகமெடலா இயக்கி வருவதாகவும் . கே.கே.ராதா கிருஷ்ணன் தயாரித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது . மேலும் இப்படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர்கள் குறித்த விவரம் தற்போது வரை வெளியாகவில்லை.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சென்னையை துவைத்தெடுக்கும் கனமழை - சூப்பர்ஸ்டார் வீட்டில் ஏற்பட்ட பாதிப்பு..!!

More in Cinema News

To Top