Connect with us

50 நாட்களை கடந்து வெற்றிநடை போடும் சூரியின் கருடன் – விஸ்வரூப வெற்றியை கேக் வெட்டிக்கொண்டாடிய படக்குழு..!!

Cinema News

50 நாட்களை கடந்து வெற்றிநடை போடும் சூரியின் கருடன் – விஸ்வரூப வெற்றியை கேக் வெட்டிக்கொண்டாடிய படக்குழு..!!

50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கருடன் படத்தின் மாபெரும் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடியுள்ள நிலையில் தற்போது அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது .

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் சூரி இன்று கதையின் நாயகனாக சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் . அந்தவகையில் சூரியின் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படமே கருடன்.

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தரமாக தயாரான இப்படம் கடந்த மே மாதம் 31 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.

ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிப்படமாக உருவெடுத்துள்ள இப்படம் மொத்தமாக 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் 50 நாட்களை கடந்து வெற்றி நடைபோட்டு வரும் இப்படத்தின் விஸ்வரூப வெற்றியை இன்று படக்குழு ஒன்று கூடி சிறப்பாக கேக் வெட்டி கொண்டாடி உள்ளது .

இந்த வெற்றி கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தஞ்சையில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பு - டிடிவி தினகரன் கண்டனம்..!!

More in Cinema News

To Top