Connect with us

வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்ட தென் தமிழகம் – நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.!!

Featured

வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்ட தென் தமிழகம் – நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.!!

வரலாறு காணாத பேரிடரில் சிக்கி தவிக்கும் தென் தமிழக மக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

சென்னை உளப்பட 4 மாவட்டங்களை மிக்ஜாம் புயல் ஒரு காட்டு காட்டிய நிலையில் தற்போது புயலே இல்லாமல் கனமழையால் தென் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி திருநெல்வேலி நெல்லை தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.

தென் தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் அப்பகுதிகளில் வசித்து வரும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் மிக்ஜாம் புயலின்போது சிரமத்தில் இருந்த மக்களை தமிழக அரசு எப்படி மீட்டதோ அதே போல் தென் தமிழகத்தில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கிட பலரும் வலுயுறுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் வரலாறு காணாத பேரிடரில் சிக்கி தவிக்கும் தென் தமிழக மக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

  • மழையால் சேதமடைந்த குடிசைகளுக்கு வழங்கப்படும் தொகை ரூ.5,000ல் இருந்து ரூ.10,000ஆக உயர்வு

  • மழையால் 33%க்கு மேல் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.13,500ல் இருந்து ரூ.17,000ஆக உயர்வு

  • கால்நடைகளின் உயிரிழப்புக்கு வழங்கும் தொகை ரூ.33,000ல் இருந்து ரூ.37,000ஆக உயர்வு

  • உயிரிழந்த வெள்ளாடு, செம்மறி ஆடுகளுக்கான நிவாரணத் தொகை ரூ.4,000ஆக உயர்வு

  • மழையால் உயிரிழந்தவர்களுக்கு வழங்கும் நிவாரணம் ரூ.4 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்வு

  • நெல்லை, தூத்துக்குடியில் கடுமையாக வெள்ளம் பாதித்த வட்டங்களில் உள்ள மக்களுக்கு ரூ.6,000 நிவாரணம்; லேசான பாதிப்புகளுக்கு ரூ.1,000 நிவாரணம்

  • தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு ரேஷன் அட்டைகளுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும்

தென் தமிழகத்தில் வானிலை மையம் அறிவித்ததைவிட பல மடங்கு அதிக மழை பெய்துள்ளது . சென்னை மக்களைப்போல் தென்மாவட்ட மக்களையும் அரசு காக்கும் என உறுதி தருகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கவினின் Bloody Beggar 3 நாட்களில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா..?

More in Featured

To Top