Connect with us

ஆன்மிக தளங்கள் எல்லோரையும் ஆதரிக்கின்றன மதத் தளங்கள் எல்லோரையும் ஏற்றுக் கொள்வதில்லை – அமைச்சர் மனோ தங்கராஜ்

Featured

ஆன்மிக தளங்கள் எல்லோரையும் ஆதரிக்கின்றன மதத் தளங்கள் எல்லோரையும் ஏற்றுக் கொள்வதில்லை – அமைச்சர் மனோ தங்கராஜ்

பழனி முருகன் கோவிலில் இந்தி அல்லாதோருக்கு அனுமதி இல்லை என்ற உயர்நீதி மன்றத்தின் தீர்ப்புக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது :

பாரம்பரிய மரபுகள் பற்றி பெருமையாக பேசும் தமிழ் சமூகம் காலம் காலமாய் பின்பற்றி வரும் மரபுகளை சிதைக்கும் முயற்சியை வேடிக்கை பார்க்குமா?? வரலாறு நெடுக பலமுறை ‘தமிழர் வழிப்பாட்டு உரிமைகள் பறிப்பு’ என்பது நடந்தேறியுள்ளது.அதன் நீட்சியே இந்த நடவடிக்கை.

ஒரு காலத்தில் பண்டாரம் சமூகத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த பழனி தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகன் கோவிலில் அவர்களின் அர்ச்சகம் செய்யும் உரிமைகளே பறிக்கப்பட்டன.

தமிழில் அர்ச்சனைகள் செய்வதை மாற்றி சமஸ்கிருத அர்ச்சனையே விதியானது. சைவம், வைணவம், கௌமாரம், காணப்பதியம், சௌரம், சாக்தம் மற்றும் நாட்டார் வழக்கு தெய்வங்கள் வழிபாடு என்று பன்முகத் தன்மை கொண்ட தமிழர் வழிப்பாட்டு மரபுகளை ஒற்றை அடையாளத்தில் அடைத்து, இந்த சமஸ்கிருத மேலாதிக்கத்துக்கு அடிப்பணியச் செய்தனர். கோவில் கருவறைக்குள் தமிழர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இன்று கொடிமரம் என்ற இந்த தடுப்புக்கான அளவுகோலும் அந்த வழிப்பாட்டு உரிமை மறுப்பின் நீட்சியே. இது தமிழரின் வழிப்பாட்டு ஜனநாயகத்துக்கு எதிரானது.

தமிழ் நாட்டில் பழனி முருகன் கோவில், வேளாங்கண்ணி மாதா ஆலயம், நாகூர் தர்கா என்பதெல்லாம் அனைத்து சமயத்தினருக்கும் பொதுவான தளங்களாகவே இருந்திருக்கின்றன.

இன்றளவும் தமிழ் நாட்டில் உள்ள பல கிராமங்களில் மக்கள் ஒற்றுமையுடன் இவ் வழிபாட்டு தளங்களுக்கு சென்று வருகின்றனர்.

இன்றும் இந்து அல்லாத தமிழக இளைஞர்கள் டிஎம் சௌந்தரராஜன் அவர்களின் முருகன் வழிப்பாட்டு பாடல்கள் விரும்பி கேட்பதும், பாட்டுப் போட்டிகளிலும் கலை நிகழ்ச்சிகளிலும் பாடி பரிசு பெறுவதும் அவர்களின் குடும்பத்தாலே கொண்டாடுப் பட்டு வருகின்றன.

இது அனைத்து சமய தமிழர்களின் மத நல்லிணக்கத்தின் அடையாளம் ஆகும். ஆனால் இந்த ‘கொடிமரம் தடுப்பு அளவுகோல்’ நடவடிக்கை தமிழ் நாட்டின் உன்னதமான மரபை இல்லாமல் செய்து, மத சர்வாதிகார போக்கை இங்கு நுழைக்கிறது. ஆன்மிக தளங்கள் எல்லோரையும் ஆதரிக்கின்றன ஆனால் மதத் தளங்கள் எல்லோரையும் ஏற்றுக் கொள்வதில்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இது எளிதான விஷயமல்ல - 'அமரன்' படக்குழுவுக்கு இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து பாராட்டு..!!

More in Featured

To Top