Connect with us

மும்பை மண்ணில் பேட்டிங்கில் தடுமாறிய ஹைதராபாத் – மும்பை அணிக்கு 174 ரன்கள் இலக்கு..!!

Featured

மும்பை மண்ணில் பேட்டிங்கில் தடுமாறிய ஹைதராபாத் – மும்பை அணிக்கு 174 ரன்கள் இலக்கு..!!

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன் ரைஸரஸ் ஹைதராபாத் அணி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 174 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் மும்பையில் உள்ள உலக புகழ் பெற்ற வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் தொடரின் 55 ஆவது லீக் போட்டியில் SRH – MI அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் பேட் கம்மனிங்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்டிக் பாண்டியா முதலில் பந்துவீச முடிவு செய்தார் .

இதையடுத்து மும்பை அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்து கடுமையான இலக்கை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் களமிறங்கினர். இதில் சிறப்பான தொடக்கத்தை கொடுப்பார் என்று பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட அபிஷேக் 11 ரன்களில் ஆட்டமிழந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அடுத்து வந்த வீரர்களை அனைவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க டிராவிஸ் ஹெட் மட்டும் தனி ஆளாக அணிக்கு தேவையை ரன்களை எடுக்கும் முயற்சியில் தீவிரமாக இருந்தார்.

சிறப்பாக விளையாடிய ஹெட் அரைசதம் கடந்து அசத்துவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 48 ரன்களில் வெளியேறினார்.

பின்னர் வந்த வீரர்களும் மும்பை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணற இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணி 173 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது மும்பை அணி விளையாடி வருகிறது.

இந்நிலையில் மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  DEFINITELY NOT : 2025 IPL-ல் தோனியை தக்கவைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி..!!

More in Featured

To Top