Connect with us

திரையரங்குகளில் வசூல் மழை பொழியும் ஸ்டார் படம் – 6 நாட்களில் எவ்ளோ வசூல் தெரியுமா..?

Cinema News

திரையரங்குகளில் வசூல் மழை பொழியும் ஸ்டார் படம் – 6 நாட்களில் எவ்ளோ வசூல் தெரியுமா..?

கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிநடைப் போட்டு வரும் நிலையில் தற்போது இப்படத்தின் லேட்டஸ்ட் வசூல் விவரம் வெளியாகி உள்ளது .

தமிழ் சினிமாவில் பியர் பிரேமா காதல் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் இளன் . இவரது இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவான திரைப்படம் ஸ்டார் .

ஹரிஷ் கல்யாண் நடிக்க இருந்த இந்த படம் சில பல காரணங்களால் கவின் கைக்கு வர எந்த வித தட்டுதடுங்களும் இன்றி சிறப்பான வகையில் படம் உருவானது.

கவின் , இளன் , யுவன் சங்கர் ராஜா காம்போவில் சிறப்பாக தரமாக உருவான இப்படம் கடந்த 10 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது.

முதல் நாளில் இருந்த ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்ற இப்படம் தற்போது வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றியை சந்தித்து மாபெரும் வெற்றிப்படமாக உருவெடுத்துள்ளது .

இந்நிலையில் ஸ்டார் திரைப்படத்தின் 6 நாட்கள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஸ்டார் திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ. 19 கோடி வரை வசூல் செய்துள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தாவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பெண் டிஎஸ்பி மீது நடத்தப்பட்ட தாக்குதல் - கடுமையான தண்டணை வழங்க இபிஎஸ் வலியுறுத்தல்..!!

More in Cinema News

To Top