Connect with us

வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது ஸ்டார்லைனர் விண்கலம்..!!

Featured

வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது ஸ்டார்லைனர் விண்கலம்..!!

நாசாவின் புகழ்பெற்ற விஞ்ஞானிகளான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகிய இருவருடன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்ட ஸ்டார்லைனர் விண்கலம் தனியாக பூமிக்கு திரும்பியுள்ளது.

உலகில் இருக்கும் பல புகழ் பெற்ற விண்வெளி ஆராய்ச்சி மையங்களில் ஒன்றாக விளங்கி வரும் ஆராய்ச்சி நிலையமே அமெரிக்காவின் நாசா .

இந்நிலையில் நாசாவின் புகழ்பெற்ற விஞ்ஞானிகளான விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், மற்றும் புட்ச் வில்மோர் கடந்த ஜூன் 5 ஆம் தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பப்பட்டனர் .

அனுப்பிய நாளில் இருந்து சரியாக 8 நாட்களில் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டிய அவர்கள் இன்று வரை பூமிக்கு திரும்ப முடியாமல் விண்வெளியில் சிக்கியுள்ளனர்.

விஞ்ஞானிகள் சென்ற ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பூமிக்குத் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது .

இதன் காரணமாகக் சுமார் 80 நாட்களுக்கு மேலாக சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ளனர். இந்நிலையில் இருவரையும் பூமிக்கு அழைத்த வர இருந்த ஸ்டார் லைனர் விண்கலம் தற்போது இவர்கள் இன்றி பூமிக்கு திரும்பி உள்ளது.

நியூமெக்சிகோ ஒயிட் சேண்ட்ஸ் ஸ்பேஸ் ஹார்பர் பகுதியில் பாராசூட் உதவியுடன் ஸ்டார் லைனர் விண்கலம் தரையிறங்கி உள்ளது.

ஸ்டார்லைனரில் ஹீலியம் வாயு கசிவு, எஞ்சின் கோளாறு காரணமாக திரும்ப அழைத்து வரும் முடிவை தற்காலிகமாக கைவிட்ட நாசா அந்த இரு விஞ்ஞானிகளையும் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்கு அழைத்து வர திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மெட்ரோவுக்கு மத்திய அரசு கொடுத்த ரூ.21,000 கோடியில் ரூ.15,120 கோடி என்ன ஆனது?- ஹெச்.ராஜா
Continue Reading
Advertisement
You may also like...

More in Featured

To Top