Connect with us

தென் தமிழக மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை – கள ஆய்வில் அமைச்சர் உதயநிதி

Featured

தென் தமிழக மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை – கள ஆய்வில் அமைச்சர் உதயநிதி

தொடர் கனமழையின் காரணமாக வெள்ளத்தில் சிக்கி இருக்கும் தென் தமிழக மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை உளப்பட 4 மாவட்டங்களை மிக்ஜாம் புயல் ஒரு காட்டு காட்டிய நிலையில் தற்போது புயலே இல்லாமல் கனமழையால் தென் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி திருநெல்வேலி நெல்லை தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.

தென் தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் அப்பகுதிகளில் வசித்து வரும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் மிக்ஜாம் புயலின்போது சிரமத்தில் இருந்த மக்களை தமிழக அரசு எப்படி மீட்டதோ அதே போல் தென் தமிழகத்தில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கிட பலரும் வலுயுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான நெல்லை மாவட்டத்திற்கு சென்ற அமைச்சர் உதயநிதி பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு சென்று ஆய்வு செய்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி கூறியதாவது :

மக்களுக்கு தேவையான பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பால் இதுவரை 3 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

மழை வெள்ளம் முழுமையாக வடிந்த பிறகு பாதிப்புகள் குறித்து கணக்கீடு செய்யும் பணி நடைபெறும்.

ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கியுள்ளவர்களுக்கு உணவு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  DEFINITELY NOT : 2025 IPL-ல் தோனியை தக்கவைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி..!!

More in Featured

To Top