Connect with us

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மிக குறைவான மதிப்பெண் பெற்ற மாணவன் – ஒன்று கூடி கொண்டாடிய ஊர் மக்கள்..!!

Featured

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மிக குறைவான மதிப்பெண் பெற்ற மாணவன் – ஒன்று கூடி கொண்டாடிய ஊர் மக்கள்..!!

மன்னார்குடி அருகே 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களிலும் மிக குறைவான மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவரை நண்பர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி கொண்டாடியுள்ள வீடியோ தற்போது செம வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டில் 9.10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய 10 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியானது.

9.10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய இத்தேர்வில் 8,18,743 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர் .

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 91.77% ஆகவும், அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 87.90% ஆகவும் உள்ளது.

இந்நிலையில் மன்னார்குடி அருகே 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களிலும் மிக குறைவான மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவரை நண்பர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி கொண்டாடியுள்ள வீடியோ தற்போது செம வைரலாகி வருகிறது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடுவூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவன் மணிகண்டன், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 210 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

தேர்ச்சி பெறுவாரா என பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட அந்த மாணவன் ஒருவழியாக தேர்ச்சி பெற்றதை கொண்டாட நினைத்த அவரது ஊர் மக்கள் மற்றும் நண்பர்கள். அந்த மாணவரை அழைத்து மாலை அணிவித்து பைக்கில் ஊர்வலமாக அழைத்துச் சென்று, கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர்

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  SOUP REVENGE - நைஜீரியாவில் காதல் முறிவால் நடந்த விபரீத கொலை சம்பவம்..!!

More in Featured

To Top