Connect with us

சர்தார்-2 படப்பிடிப்பில் உயிரிழந்த சண்டை பயிற்சியாளர் – ஆறுதல் சொல்ல முடியாமல் கண் கலங்கி நின்ற நடிகர் கார்த்தி..!!

Cinema News

சர்தார்-2 படப்பிடிப்பில் உயிரிழந்த சண்டை பயிற்சியாளர் – ஆறுதல் சொல்ல முடியாமல் கண் கலங்கி நின்ற நடிகர் கார்த்தி..!!

நடிகர் கார்த்தியின் ‘சர்தார்-2’ படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் பிரபல சண்டை பயிற்சியாளர் உயிரிழந்துள்ள நிலையில் அவரது உடலுக்கு நடிகர் கார்த்தி கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் கார்த்தியின் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார் . பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்தது.

இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி ஒரு சில நாட்களே ஆன நிலையில் தற்போது படக்குழு சோக கடலில் மூழ்கியுள்ளது.

சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் நேற்று படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் ஏழுமலை என்ற சண்டை பயிற்சியாளர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் திருவொற்றியூரில் வைக்கப்பட்டுள்ள ஏழுமலையின் உடலுக்கு நடிகர் கார்த்தி கண்ணீருடன் அஞ்சலி செலுத்தியுள்ளார் . இது தொடர்பான வீடியோ மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண வீடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

More in Cinema News

To Top