Connect with us

IND VS ZIM : பந்துவீச்சில் அசத்திய சுப்மன் கில்லின் இளம்படை – ஜிம்பாப்வே அணி 115 ரன்கள் குவிப்பு..!!

Featured

IND VS ZIM : பந்துவீச்சில் அசத்திய சுப்மன் கில்லின் இளம்படை – ஜிம்பாப்வே அணி 115 ரன்கள் குவிப்பு..!!

ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வரும் டி20 தொடரில் இன்று நடைபெற்று வரும் முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி இந்திய அணிக்கு 116 ரன்களை இலக்காக வைத்துள்ளது.

விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடர் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது . இதில் சுமார் 17 வருடங்களுக்கு பின் இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்று அசத்தியுள்ளது.

இதையடுத்து சுப்மன் கில்லின் தலைமையிலான இந்திய அணி ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது .

அந்தவகையில் ஜிம்பாப்வே நாட்டில் உள்ள Harare Sports Club மைதானத்தில் இன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா – ஜிம்பாப்வே மோதுகிறது.

இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து இந்திய அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஆரம்பம் முதல் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வந்த ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து தடுமாறி நின்றனர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த ஜிம்பாப்வே அணி 115 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 116 ரன்கள் எடுத்தால் வென்றி என்ற இலக்குடன் தற்போது இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்நிலையில் ஜிம்பாப்வே நாட்டில் நடைபெறும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை தீபிகா படுகோனே - வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!!

More in Featured

To Top