Connect with us

‘சூர்யா 44’ படப்பிடிப்பில் ஏற்பட்ட விபரீதம் – காயங்களுடன் நடிகர் சூர்யா மருத்துவமனையில் அனுமதி..!!

Cinema News

‘சூர்யா 44’ படப்பிடிப்பில் ஏற்பட்ட விபரீதம் – காயங்களுடன் நடிகர் சூர்யா மருத்துவமனையில் அனுமதி..!!

சூர்யா 44 படத்தில் மும்மராக நடித்து வரும் நடிகர் சூர்யா தற்போது படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக கலக்கி வரும் சூர்யாவின் நடிப்பில் தற்போது சூர்யா 44 திரைப்படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது .கார்த்திக் சுப்புராஜ் இயக்கம் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெட் நடித்து வர இவர்களுடன் ஏராளமான இளம் நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நடிகர் சூர்யா விபத்தில் சிக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

ஊட்டியில் ‘சூர்யா 44’ படத்தின் சண்டைக்காட்சி படப்பிடிப்பின்போது நடிகர் சூர்யாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது

இதையடுத்து உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சில நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இப்படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு ஜூலை 26ம் தேதி முதல் ஊட்டியில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வேட்டையன் படத்தில் மஞ்சு வாரியர் அறிமுக வீடியோவை வெளியிட்டது படக்குழு..!!

More in Cinema News

To Top