Connect with us

சதீஷ் நடிப்பில் உருவான ‘சட்டம் என் கையில்’ படத்தின் டீசர் வெளியானது..!!

Cinema News

சதீஷ் நடிப்பில் உருவான ‘சட்டம் என் கையில்’ படத்தின் டீசர் வெளியானது..!!

சதீஷ் நடிப்பில் உருவான ‘சட்டம் என் கையில்’ படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தனது கலை பயணத்தை தொடங்கி இன்று நகைச்சுவை சார்ந்த படங்களில் கதையின் நாயகனாக கலக்கி வருபவர் தான் நடிகர் சதிஷ்.

ஹீரோவாக சதிஷ் நடித்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் அவர் தொடர்ந்து ஹீரோவாக நடிக்க தற்போது அடுத்தடுத்த படங்களில் நடிகர் சதிஷ் ஹீரோவாக நடித்து வருகிறார்.

அந்தவகையில் தற்போது சதீஷின் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படமே ‘சட்டம் என் கையில்’ . சாச்சி இயக்கம் இப்படத்தில் சதீஷுடன் சேர்ந்து வித்யா பிரதீப் , மைம் கோபி , அஜய் ராஜ் , ரித்திகா ராம் டாஸ் , KPY சதிஷ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புக்கிடையே உருவாகி உள்ள இப்படத்தின் அப்டேட்டுக்காக அனைவரும் காத்திருந்த நிலையில் தற்போது இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதோ ‘சட்டம் என் கையில்’ படத்தின் டீசர்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ‘கொட்டுக்காளி’ படத்தின் ஒ.டி.டி வெளியீடு குறித்த முக்கிய அப்டேட் வெளியானது..!!

More in Cinema News

To Top