Connect with us

பிசாசு-2 படத்தை வெளியிட இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

Cinema News

பிசாசு-2 படத்தை வெளியிட இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

மிஷ்கினின் ‘பிசாசு-2’ படத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழ் சினிமாவில் இருக்கும் தனித்துவம் மிக்க இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் மிஸ்கின். ஹாரர் மற்றும் திரில்லர் படங்களுக்கு பெயர்போன இயக்குநர் என்று கூறப்படும் இவரது இயக்கத்தில் வெளியான பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது.

அதிலும் குறிப்பாக இவரது இயக்கத்தில் வெளியான பிசாசு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்தது . இதையடுத்து மிஷ்கின் இயக்கத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.

ஆண்ட்ரியா உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்தின் மீது ஏகபோக எதிர்பார்ப்புகள் நிலவி வரும் நிலையில் தற்போது இப்படத்திற்கு புதிய சிக்கல்கள் உருவாகி உள்ளது.

அதன்படி ‘பிசாசு-2’ படத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

விநியோக உரிமைக்கான 1.84 கோடி பாக்கி தொகையை வழங்கும் வரை படத்தை வெளியிடக்கூடாது என ஃப்ளையிங் ஹார்ஸ் தயாரிப்பு நிறுவனம், ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் மீது வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் தாப்ரோது சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண வீடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

More in Cinema News

To Top