Connect with us

சிறப்பாக நடைபெற்று முடிந்த தளபதி 69 படத்தின் பூஜை – வைரல் போட்டோஸ்..!!

Cinema News

சிறப்பாக நடைபெற்று முடிந்த தளபதி 69 படத்தின் பூஜை – வைரல் போட்டோஸ்..!!

நடிகர் விஜயின் கடைசி படமாக கூறப்படும் தளபதி 69 படத்தின் பூஜை இன்று சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாக வலம் வருகிறது.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் . இதுவரை 68 படங்களில் நடித்துள்ள நடிகர் விஜய் ஏரளமான சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து எண்ணற்ற ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் விஜய் முழு நேர அரசியலில் விரைவில் ஈடுபட உள்ள நிலையில் இன்று அவர் நடிக்க போகும் அவரது கடைசி படத்தின் பூஜை சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

விஜய்யின் கடைசி படத்தை பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க அ. வினோத் இயக்கத்தில் அனிருத் இசையில் படம் தாறுமாறாக உருவாக உள்ளது.

இப்படத்தில் விஜயுடன் சேர்ந்து பிரகாஷ் ராஜ் , பூஜா ஹெட்ஜ் , மமிதா , ப்ரியாமணி , கவுதம் மேனன் , உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது .

இந்நிலையில் Thalapathy69 படத்தின் பூஜை இன்று சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில் பூஜை குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள படக்குழு ரசிகர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மேம்பாலங்களில் நிற்கும் கார்களுக்கு அபராதம் விதிக்கப்படாது - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு..!!

More in Cinema News

To Top