Connect with us

ப்ளாக் பஸ்டர் படமாக உருவெடுத்த தங்கலான் – படக்குழுவுக்கு போடப்பட்ட தாறுமாறு கறிவிருந்து..!!

Cinema News

ப்ளாக் பஸ்டர் படமாக உருவெடுத்த தங்கலான் – படக்குழுவுக்கு போடப்பட்ட தாறுமாறு கறிவிருந்து..!!

சீயான் விக்ரமின் தங்கலான் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றிப்படமாக உருவெடுத்துள்ள நிலையில் படக்குழுவுக்கு தடபுடலான் கறி விருந்து போடப்பட்டுள்ளது.

பா.ரஞ்சித்தின் துணிச்சலான இயக்கத்தில் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் தில்லான தயாரிப்பில் சீயான் விக்ரம் , பார்வதி , பிரியங்கா மோகனன், பசுபதி உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்களின் துணிச்சலான நடிப்பில் உருவான திரைப்படமே தங்கலான்.

மெல்லிசை மன்னன் ஜி.வி.பிரகாஷ் இசையில் விறுவிறுப்பாக கட்டமைக்கப்பட்ட இப்படம் கடந்த 15 ஆம் தேதி திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாகி தற்போது தூள் கிளப்பி வருகிறது.

தங்கலான் படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் அமோக வரவேற்பால் இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த பேச்சுகளும் கசிந்து வருவதாக கூறப்படுகிறது .

இந்நிலையில் தற்போது தங்கலான் திரைப்படத்தின் வெற்றியை சிறப்பாக கொண்டையுள்ள படக்குழு அங்கு தடபுடலான் கறி விருந்தும் போடப்பட்டுள்ளது .

இந்த வெற்றி விருந்து விழாவில் கலந்து கொண்ட நடிகர் விக்ரம் அனைவருக்கும் தனது கைகளால் உணவு பரிமாறி அசத்தினார்.

இந்த வெற்றி விழாவின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு தற்போது செம வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ‘கொட்டுக்காளி’ படத்தின் ஒ.டி.டி வெளியீடு குறித்த முக்கிய அப்டேட் வெளியானது..!!

More in Cinema News

To Top