Connect with us

விரைவில் ‘தங்கலான்’ பட ட்ரைலர் – ஜி.வி.பிரகாஷ் கொடுத்த தரமான அப்டேட்..!!

Cinema News

விரைவில் ‘தங்கலான்’ பட ட்ரைலர் – ஜி.வி.பிரகாஷ் கொடுத்த தரமான அப்டேட்..!!

ரசிகர்களின் ஏகபோக எதிர்பார்ப்பாக காத்திருந்த தங்கலான் படத்தின் சிறப்பான தரமான அப்டேட்டை ஜி.வி.பிரகாஷ் கொடுத்துள்ளார்.

சீயான் விக்ரமின் படுமிரட்டலான நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் தான் ‘தங்கலான்’ பா. ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தில் சீயான் விக்ரமுடன் சேர்ந்து மாளவிகா மோகன் உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் 2024 ஆம் ஆண்டின் ஆரம்பமே வெளியாக இருந்த நிலையில் தற்போது வரை இந்த படம் சில பல காரணங்களுக்காக வெளியாகாமல் உள்ளது .

இந்நிலையில் இப்படம் குறித்த சிறப்பான தரமான அப்டேட்டை அப்படத்தின் இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜி.வி.பிரகாஷ் கூறிருப்பதாவது :

“தங்கலான் படத்தின் பின்னணி இசை அமைக்கும் பணிகள் முடிந்துவிட்டது. என்னுடைய பெஸ்டை இப்படத்துக்கு கொடுத்துள்ளேன். இந்த அட்டகாசமான திரைப்படத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறேன்.

உங்களை வியக்க வைக்கும் மிரட்டலான ட்ரெய்லர் விரைவில் வெளியாக உள்ளது. இந்திய சினிமா ‘தங்கலான்’ படத்துக்காக தயாராகிக் கொண்டிருக்கிறது” என இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கோட் படத்தில் அப்பாவை பார்த்து நெகிழ்ந்த கேப்டனின் மகன்கள்..!!

More in Cinema News

To Top