Connect with us

பாரிஸில் கோலாகலமாக தொடங்கியது 33ஆவது ஒலிம்பிக் போட்டிகள்..!!

Featured

பாரிஸில் கோலாகலமாக தொடங்கியது 33ஆவது ஒலிம்பிக் போட்டிகள்..!!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் போட்டிகள் இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது.

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான விளையாட்டான ஒலிம்பிக் இந்த முறை பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கோலாகலமாக நடைபெறுகிறது.

விளையாட்டு வீரர்களின் கனவாக இருக்கும் இந்த ஒலிம்பிக் தொடரில் வீராங்கனைகள் 5,250 பேர், வீரர்கள் 5,250 பேர் என மொத்தம் 10,500 போட்டியாளர்கள் பங்கேற்றிருக்கின்றனர்

இதில் இந்தியா சார்பாக 70 வீரர்கள், 47 வீராங்கனைகள் என மொத்தம் 117 பேர் பங்கேற்றிருக்கின்றனர். அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் ஒலிம்பிக் விளையாட்டுகளில் களம் காண்கின்றனர்.

இந்நிலையில் இந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டியை நேரில் காண மொத்தம் ஒரு கோடி டிக்கெட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இதில் 97 லட்சம் டிக்கெட்கள் விற்பனையாகி விட்டதாக ஒலிம்பிக் கமிட்டி சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது; இதற்கு முன் அட்லாண்டா ஒலிம்பிக் போட்டியை (1996) 83 லட்சம் டிக்கெட்கள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஆனா கெட்ட பையன் சார் அந்த சின்ன பையன் - அரசியல் மேடையிலும் குட்டி ஸ்டோரி சொன்ன விஜய்..!!

More in Featured

To Top