Connect with us

தேவாரா படத்தின் 3 வது பாடல் வெளியானது..!!

Cinema News

தேவாரா படத்தின் 3 வது பாடல் வெளியானது..!!

ஜூனியர் என்டிஆரின் அசத்தலான நடிப்பில் உருவாகி உள்ள தேவரா படத்தின் 3 வது சிங்கள் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். அதிரடி ஆக்சன் படங்களுக்கு பெயர்போன இவரது அசத்தலான நடிப்பில் தற்போது சிறப்பாக தரமாக உருவாகி உள்ள திரைப்படமே தேவரா.

கொரட்டலா சிவா இயக்கத்தில் தயாராகி உள்ள இப்படத்தில் . ஜூனியர் என்.டி.ஆர்க்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகையும் போனி கபூரின் அன்பு மகளுமான ஜான்வி கபூர் நடித்துள்ளார் .

மாபெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ஜான்வியுடன் இணைந்து பிரகாஷ்ராஜ், சைஃப் அலிகான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் .

இந்திய சினிமாவில் பிரபல இளம் இசையமைப்பாளரான அனிருத் இசைமைக்கும் இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வரும் நிலையில் தற்போது இப்படத்தின் 3 வது சிங்கள் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே இப்படத்தில் இருந்து 2 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது 3 ஆவது பாடலான ‘தாவுடி’ பாடல் வெளியாகி உள்ளது.

இதோ ‘தாவுடி’ பாடலை கேட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் நண்பர்களே..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "ONE LAST TIME" - வெளியானது விஜய் நடிக்கும் கடைசி படத்தின் அப்டேட்..!!

More in Cinema News

To Top