Connect with us

ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது..!!

Cinema News

ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது..!!

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தயாரிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் முக்கிய அறிவிப்பை அவர்களின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக வலம் வரும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தற்போது தங்களது தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் மூலம் வரிசையாக பல படங்களை தயாரித்து வருகின்றனர்.

ஏற்கனவே இவர்களது தயாரிப்பில் வெளியான “கூழாங்கல்” திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் பல விருதுகளை பெற்றது .

இதையடுத்து பல படங்களை சத்தமின்றி தயாரித்து வரும் இந்நிறுவனத்தின் அடுத்த புதிய படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இசைஞானி இளைய ராஜாவின் இசையில் வெளிவர இருக்கும் இப் படத்தில் பாரி இளங்கோவன் மற்றும் அம்மு அபிராமி முக்கிய கதாபத்திரங்களில் நடிப்பதாக செய்திகள் வெளியான நிலையில் இப்படம் குறித்த அடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமன்னா குறித்து அவதூறாக பேசினேனா - பட்டென விளக்கம் கொடுத்த பார்த்திபன்..!!

More in Cinema News

To Top