Connect with us

சம்பவம் இருக்கு : ரசிகர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்பில் இருக்கும் தங்கலான் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியானது..!!

Cinema News

சம்பவம் இருக்கு : ரசிகர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்பில் இருக்கும் தங்கலான் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியானது..!!

புரட்சி இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தரமாக உருவாகி உள்ள ‘தங்கலான்’ படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சீயான் விக்ரம் நடிப்பில் தற்போது பல படங்கள் விறுவிறுப்பாக உருவாகி வரும் நிலையில் ரசிகர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரிலீசுக்கு தயாராக உள்ள திரைப்படமே தங்கலான் .

வரலாற்று கதைக்களம் கொண்ட இப்படத்தை பா. ரஞ்சித் இயக்க இப்படத்தில் விக்ரமுடன் சேர்ந்து மாளவிகா மோகன் , பார்வதி , பசுபதி உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ட்ரைலர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி இப்படத்தின் ரன் டைம் 2 மணி நேரம் 36 நிமிடங்கள் எனவும் சென்சார் இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சதீஷ் நடிப்பில் உருவான ‘சட்டம் என் கையில்’ படத்தின் டீசர் வெளியானது..!!

More in Cinema News

To Top