Connect with us

எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும் – அசுர பலம் கொண்ட ஹைதராபாத்தை அசால்டாக வீழ்த்தியது சென்னை அணி..!!

Featured

எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும் – அசுர பலம் கொண்ட ஹைதராபாத்தை அசால்டாக வீழ்த்தியது சென்னை அணி..!!

ரசிகர்களின் உற்சாக வெள்ளத்தில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் அசுர பலம் கொண்ட சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசால்டாக வீழ்த்தியுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் சென்னையில் உள்ள உலக புகழ் பெற்ற சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் CSK – SRH அணிகள் பலப்பரீட்சை நடத்தியது .

ரசிகர்களின் ஆரவாரத்துடன் தொடங்கிய இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது . இதையடுத்து ஹைதராபாத் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது .

சென்னையின் தொடக்க வீரர்களாக ரஹானே மற்றும் கேப்டன் ருதுராஜ் களமிறங்கினர். இதில் சிறப்பான தொடக்கத்தை கொடுப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஹானே 9 ரன்களில் வெளியேறினார்.

இதையடுத்து மிட்சல் கேப்டன் ருதுராஜுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் . சிறப்பாக விளையாடிய இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடந்து அசத்தினர் .

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய மிட்சல் 52 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்ததாக சரவெடி துபே களத்திற்கு வந்தார். வந்த நொடி முதல் அதிரடி காட்டிய துபே ஹைதராபாத் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார்.

ஒரு பக்கம் துபே அதிரடி காட்ட மறுபக்கம் சதம் விளாசுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ருதுராஜ் 98 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து இறுதி ஓவரில் களத்திற்கு வந்த தோனி 2 பந்தில் 5 ரன்கள் எடுத்தார் . இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழந்த சென்னை அணி 212 ரன்கள் குவித்தது. இதையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தது .

அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர் .அதிரடி ஆட்டத்தை தொடங்குவார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஜோடி சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தது.

இவர்களை தொடர்ந்து களம்கண்ட அன்மோல் ப்ரீத் சிங்கும் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேற அடுத்ததாக மார்க்கரம் மற்றும் நிதிஷ் குமார் அணியின் ஸ்கோரை உயர்த்த முயன்றனர். ஆனால் அவர்களும் நீண்ட நேரம் நீடிக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து.

See also  அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் லிரிக் வீடியோ வெளியானது..!!

இவர்களை தொடர்ந்து வந்த மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 18.5 ஓவர்களில் ஹைதராபாத் அணி ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 78 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேடான வெற்றியை பதிவு செய்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top