Connect with us

டிமான்ட்டி காலனி 2 படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்டது படக்குழு..!!

Cinema News

டிமான்ட்டி காலனி 2 படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்டது படக்குழு..!!

டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் திரையரங்குகளில் அனல் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது இப்படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது.

திரில்லர் படங்களுக்கு பெயர் போன நடிகர் அருள் நிதியின் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான கதறவைக்கும் ஹாரர் திரைப்படமே ‘டிமாண்டி காலனி’ .

காட்சிக்கு காட்சி ஏராளமான ட்விஸ்டுகளும் பின்னணி இசையும் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரவைத்ததது மட்டுமல்லாமல் வசூலிலும் இப்படம் பட்டய கிளப்பியது.

இப்படம் கொடுத்த மாபெரும் வெற்றியின் பலனாக இதன் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக உருவாகி வந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி சுதந்திரத்தினத்தன்று திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது .

முதல் பாகத்தை போலவே இப்படத்தில் நடிகர் அருள் நிதி சிறப்பான நடிப்பை வெளியிப்படுத்த படமோ சூப்பர் டூப்பர் ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றுள்ள இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி படமாக உருவெடுத்துள்ள நிலையில் தற்போது இப்படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ‘கொட்டுக்காளி’ படத்தின் ஒ.டி.டி வெளியீடு குறித்த முக்கிய அப்டேட் வெளியானது..!!

More in Cinema News

To Top