Connect with us

பிரதர் படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு – போட்டோவுடன் அறிவித்த படக்குழு..!!

Cinema News

பிரதர் படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு – போட்டோவுடன் அறிவித்த படக்குழு..!!

ஜெயம்ரவி நடிப்பில் சத்தமின்றி உருவாகி Brother படத்தின் ரிலீஸ் தேதி சமீபத்தில் வெளியாகி இருந்த நிலையில் தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

ஜெயம் படத்தில் தொடங்கி இன்று வரை தனது எதார்த்த நடிப்பால் ரசிகர்களின் விலைமதிப்பற்ற அன்பை சம்பாதித்து இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி .

உடன் பிறந்தவரின் படங்களில் மற்றும் நடித்து வந்த இவர் தற்போது பல முன்னணி இயக்குனர்களுடன் கைகோர்த்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

அந்தவகையில் தற்போது இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படமே “Brother”.ராஜேஷ் இயக்கும் இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க இவர்களுடன் VTV கணேஷ் , நட்டி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் கமிட்டாகி நடித்து வருகின்றனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக ரிலீஸ் ஆகி வரும் நிலையில் தற்போது இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி தற்போது பிரதர் படத்தின் டப்பிங் பணிகளை இன்று ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் முடித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் போட்டோ வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  உத்தராகண்டில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்டிடுக - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்..!!

More in Cinema News

To Top