Connect with us

“கங்குவா வரார்” சூர்யாவின் ‘கங்குவா’ பட டிரெய்லர் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டது படக்குழு..!!

Cinema News

“கங்குவா வரார்” சூர்யாவின் ‘கங்குவா’ பட டிரெய்லர் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டது படக்குழு..!!

சூர்யாவின் அசுர தனமான நடிப்பில் சத்தமின்றி உருவாகி ‘கங்குவா’ திரைப்படத்தின் ட்ரைலர் ரிலீஸ் குறித்த மிக முக்கிய அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் இருக்கும் க்ளாஸான மாஸான ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா . இவரது நடிப்பில் தற்போது மிக மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் வரலாற்று படமே கங்குவா .

‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் UV கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் ஏராளாமான தொழில்நுட்ப கலைஞர்கள் பணியமர்த்தப்பட்டு இரவு பகல் பாராமல் வேலை செய்து வருகின்றனர்.

மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் இப்படத்தில் கதையின் நாயகனாக சூர்யா நடிக்க அவருடன் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டீஸர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் ட்ரைலர் எப்போது வரும் என கேள்வி எழுப்பி வந்தனர் . இந்நிலையில் கங்குவா ட்ரைலர் சூர்யாவின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அன்று வெளியாகாமல் இருந்தது ஏமாற்றமளித்தது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது . அதன்படி சூர்யா நடிப்பில் சிவா இயக்கியுள்ள ‘கங்குவா’ படத்தின் டிரெய்லர் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகும் என சிறப்பு போஸ்டர் மூலம் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,கன்னட,உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகி உள்ள இப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி உலககெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா - வெளியான ஷாக்கிங் தகவல்..!!

More in Cinema News

To Top