Connect with us

வேட்டையன் படத்தில் அபிராமியின் கதாபாத்திர அறிமுக வீடியோவை வெளியிட்டது படக்குழு..!!

Cinema News

வேட்டையன் படத்தில் அபிராமியின் கதாபாத்திர அறிமுக வீடியோவை வெளியிட்டது படக்குழு..!!

வேட்டையன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை அபிராமியின் கதாபாத்திரம் குறித்த அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஜெயிலர் என்ற சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை கொடுத்த பின் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக உருவாகியுள்ள திரைப்படமே வேட்டையன் .

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் , அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ரசிகர்களின் ஏகபோக எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மிரட்டலாக உருவாகி உள்ள இப்படம் தீபாவளி அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படத்தில் நடித்த நட்சத்திரங்களின் கதாபாத்திரம் குறித்த வீடியோவை படக்குழு ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது.

அந்தவகையில் வேட்டையன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரபல தென்னிந்திய நடிகை அபிராமியின் அட்டகாசமான அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

வேட்டையன் படத்தில் ஸ்வேதா என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை அபிராமியின் அறிமுக வீடியோ இதோ..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சென்னை மாநகராட்சியை மீண்டும் முன்னிலைக்கு கொண்டு வாருங்கள் - இபிஎஸ் வலியுறுத்தல்..!!

More in Cinema News

To Top