Connect with us

படம் பாத்தீங்களே அதை எப்படி எடுத்தாங்கனு பாத்தீங்களா – ராயன் படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டது படக்குழு..!!

Cinema News

படம் பாத்தீங்களே அதை எப்படி எடுத்தாங்கனு பாத்தீங்களா – ராயன் படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டது படக்குழு..!!

மாபெரும் வெற்றி படமாக மாறியுள்ள தனுஷின் ராயன் படத்தை அனைவரும் கொண்டாடி வரும் நிலையில் தற்போது இப்படத்தின் அசரவைக்கும் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமா கண்டெடுத்த அற்புதமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். திரையுலகில் நடிகராக , பாடகராக , பாடலாசிரியராக கலக்கி வந்த இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படமே ராயன் .

தனுஷின் 50 ஆவது படமான இப்படத்தை அவரே இயக்கி நடித்துள்ள நிலையில் இப்படத்தில் அவருடன் சேர்ந்து சந்தீப் கிஷன் , காளிதாஸ் , பிரகாஸ்ராஜ் , எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன் , அபர்ணா பாலமுரளி , சரவணன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் . கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான இப்படம் தற்போது ரசிகர்களின் தாறுமாறான வரவேற்பை பெற்று வருகிறது .

மாபெரும் வெற்றி பெற்று 100 கோடை வசூலில் இணைந்துள்ள இப்படத்தை அனைவரும் பாராட்டி வரும் நிலையில் தற்போது இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாக வலம் வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிரதர் படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு - போட்டோவுடன் அறிவித்த படக்குழு..!!

More in Cinema News

To Top